என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடமாடும் உணவு பொருள் விற்பனை  வாகனத்தை தடை செய்ய வேண்டும்
    X

    நடமாடும் உணவு பொருள் விற்பனை வாகனத்தை தடை செய்ய வேண்டும்

    • கொல்லிமலையில் சிறிய, சிறிய கிராமங்களில் உள்ள வணிகர்கள் அங்குள்ள மக்களை நம்பியே வணிகம் செய்கின்றனர்.
    • சமீப காலமாக அப்பகுதிகளில் ஆட்டோ மற்றும் வேன் மூலமாக மளிகை மற்றும் உணவுப் பெருட்களை விற்பனை செய்து வருவது அதிகரித்துள்ளது.

    நாமக்கல்:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் சிறிய, சிறிய கிராமங்களில் உள்ள வணிகர்கள் அங்குள்ள மக்களை நம்பியே வணிகம் செய்கின்றனர்.

    சமீப காலமாக அப்பகுதிகளில் ஆட்டோ மற்றும் வேன் மூலமாக மளிகை மற்றும் உணவுப் பெருட்களை விற்பனை செய்து வருவது அதிகரித்துள்ளது.

    அரசின் எந்த ஒரு அனுமதியும் பெறாமல், உணவு பாதுகாப்பு உரிமம் எதுவும் பெறாமல் இவ்வாறு பெருட்களை விற்பனை செய்வதால், அங்கு கடைகள் வைத்து சிறிய அளவில் வணிகம் செய்து வாழ்க்கை நடத்திவரும் வணிகர்கள் பலர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் வணிகர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.

    எனவே மாவட்ட கலெக்டர் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, இந்த நடமாடும் விற்பனை முறையை முழுமையாக தடைசெய்து மலைவாழ் சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் என நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கேட்டுக் கொள்கிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    Next Story
    ×