search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடநூல், பரிசு பொருட்கள் வழங்கிய எம்.எல்.ஏ
    X

    ரெயில் பெட்டிகள் போல் வர்ணம் தீட்டப்பட்டுள்ள வகுப்பறைகளை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடநூல், பரிசு பொருட்கள் வழங்கிய எம்.எல்.ஏ

    • மாத்தூர் கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 185 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • பள்ளியில் உள்ள 1, 2, 3-ம்‌ வகுப்பறைகள் ரெயில் பெட்டிகள் போன்று வர்ணம் தீட்டி புதுப்பிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    பூம்புகார் தொகுதி, செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம் மாத்தூர் கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 185 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு 8 ஆசிரியர்கள் கல்வி கற்பித்து வருகின்றனர்.இந்நிலையில் கோடை விடுமுறை நாட்கள் முடிவடைந்தது.

    பள்ளியில் உள்ள 1, 2, 3ம்‌ வகுப்பறைகள் ரெயில் பெட்டிகள் போன்று வர்ணம் தீட்டி புதுப்பிக்கப்பட்டது. இதனை பார்த்த மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.விடுமுறை முடிந்த நிலையில் நேற்று புதுப்பி க்கப்பட்ட வகுப்பறைகள் திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு ஒன்றிய குழுத்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

    தலைமை ஆசிரியர் மங்கை, ஊராட்சி மன்ற தலைவர் ராஜலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில் பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் கலந்துகொண்டு புதுப்பி க்கப்பட்ட வகுப்பறைகளை திறந்து வைத்தார். தொட ர்ந்து மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    இதில் ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் செல்வ ராஜ், வட்டார கல்வி அலுவலர்கள் பூவராகவன், டேவிட் பிரேம்குமார், தி.மு.க மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஸ்ரீதர், பொதுக்குழு உறுப்பினர் அமுர்தவிஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×