என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய எம்.எல்.ஏ.
    X

    பப்பிரெட்டியூரில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு தருமபுரி எம்.எல்.ஏ. எஸ்.பி. வெங்கடேஸ்வரன் அடிக்கல் நாட்டினார்.

    அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய எம்.எல்.ஏ.

    • தங்கள் பகுதிக்கு அங்கன்வாடி மையம் கட்டிகொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
    • கூடியிருந்த பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் கம்மம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பப்பிரெட்டியூர் கிராமம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தருமபுரி சட்டமன்ற உறுப்பினரிடம் தங்கள் பகுதிக்கு அங்கன்வாடி மையம் கட்டிகொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    அதனை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 13.25 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தங்கள் பகுதிக்கு அங்கன்வாடி மையம் கட்டிகொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். இந்த அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் சண்முகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர் ராஜூவ்காந்தி, ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா சரவணன், ஒன்றிய கவுன்சிலர் ராஜா, ராஜேந்திரன், தம்பிதுரை, சதீஷ், செல்வம், அன்பு சக்திவேல், ரத்தினவேல், குணசேகரன், கலைசெல்வி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×