என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் ஆவின் தயிர் பாக்கெட்டில் விலைப்பட்டியல் பதிவில் குளறுபடி பொதுமக்கள் குழப்பம்
    X

    விலைபட்டியல் மற்றும் எடை அளவில் குளறுபடியாக அச்சடிக்கப்பட்ட ஆவின் தயிர் பாக்கெட்.

    கொடைக்கானலில் ஆவின் தயிர் பாக்கெட்டில் விலைப்பட்டியல் பதிவில் குளறுபடி பொதுமக்கள் குழப்பம்

    • தயிர் பாக்கெட்டின் முன் பகுதியில் 200கிராம், விலை ரூ.10 என அச்சிடப்பட்டுள்ளது.தயிர் பாக்கெட்டின் ஓரத்தில் 450 கிராம் ரூ.35 என அச்சிடப்பட்டுள்ளது.
    • வாடிக்கையாளர்களுக்கு தயிர் பாக்கெட்டின் எடை குறித்தும் விலை குறித்தும் எடுத்துரைப்பதில் சில்லறை விற்பனையாளர்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் கவிதியாகராஜர் சாலையில் ஆவின் மொத்த விற்பனை நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து கொடைக்கானல் நகரின் பல சில்லறை விற்பனை கடைகளுக்கு பால் மற்றும் பால் பொருள்கள், தயிர் ஆகியவை விற்பனைக்காக வழங்கப்பட்டு வருகிறது.இதில் தயிர் பாக்கெட்டில் தயிர் வழங்கப்படும் எடை, அதன் விலைப்பதிவு ஆகியவற்றில் முரண்பாடு உள்ளது.

    இதனால் பொதுமக்களும் சில்லறை வியாபாரிகளும் குழப்பத்தில் உள்ளனர். தயிர் பாக்கெட்டின் முன் பகுதியில் 200கிராம், விலை ரூ.10 என அச்சிடப்பட்டுள்ளது.தயிர் பாக்கெட்டின் ஓரத்தில் 450 கிராம் ரூ.35 என அச்சிடப்பட்டுள்ளது.

    இதனால் சில்லறை விற்பனையாளர்களும், பொதுமக்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.வாடிக்கையாளர்களுக்கு தயிர் பாக்கெட்டின் எடை குறித்தும் விலை குறித்தும் எடுத்துரைப்பதில் சில்லறை விற்பனையாளர்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து ஆவின் மொத்த விற்பனை நிலையத்தில் விசாரித்த போது இந்த தயிர் பாக்கெட் கவர், முன்பே அச்சடித்து நிறைய உள்ளதாகவும் அது தீரும் வரை இதே பாக்கெட்டில் தான் தயிர் விற்பனைக்கு வரும் எனவும் கூறினார். ஒவ்வொரு தயிர் பாக்கெட்டிலும் சரியான எடை, சரியான விலை குறித்து முறையாக அளவிட்டு பேக்கிங் செய்யவும், சரியான விலையை அச்சிட்டு வெளியிடவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×