search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கே.கே. நகர் புனர்வாழ்வு மருத்துவமனையில் செயற்கை உறுப்புகளுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை- அமைச்சர் தகவல்

    • ஒப்புயர்வு மையக் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
    • இந்த மருத்துவமனை மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய மருத்துவமனையாகும்.

    சென்னை:

    முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் படி, சென்னை கே.கே நகர் புனர்வாழ்வு மருத்துவமனையில் செயற்கை கை, கால் பெறுபவர்கள் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

    சென்னை கே.கே. நகரில் உள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனையானது, மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனையில், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் கீழ், ரூ.28 கோடியே 40 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஒப்புயர்வு மையக் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, 'இனிமேல் கட்டணமே இல்லாமல் செயற்கை உறுப்புகளை வழங்கும் பணியினை நிறைவேற்ற வேண்டும். அதற்காக இன்று நான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் அதை முறையாக அறிவிக்க வேண்டும் என் முதலமைச்சர் கூறினார். முதல்வரின் உத்தரவின் படி, இந்த வளாகத்தில் இருந்து செயற்கை உறுப்புகளை பெறுவோர் கட்டணம் இல்லாமல் பெறுகிற ஒரு சூழல் உருவாகிறது' என்றார்.

    Next Story
    ×