search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிரேசென்ட் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் இந்தியா அலையன்ஸ் மாநாடு- அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு
    X

    கிரேசென்ட் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் இந்தியா அலையன்ஸ் மாநாடு- அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு

    • நாட்டிலேயே தமிழ்நாடு மாநிலம் தான் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த சேவை துறையில் ஒரு முன்னோடி மாநிலமாக விளங்குகிறது.
    • தமிழ்நாட்டில் மிகத் திறமையான படித்த இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது.

    சென்னை:

    கிரேசென்ட் இன்னவேஷன் மற்றும் இன்குபேஷன் கவுன்சில் மற்றும் ஸ்டார்ட் அப் ஜங்ஷன் எல்கார்ட் இணைந்து ஜி-20 டிஜிட்டல் இந்தியா அலையன்ஸ் சர்வதேச மாநாட்டின் பொதுக்கூட்டம் பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரேசென்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் குமரகுருபரன் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு எல்காட் நிர்வாக இயக்குனர் ஜான் லூயிஸ், டிட்கோ திட்ட இயக்குனர் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிரேசென்ட் நிறுவனத்தின் அதிபர் ஆரிப் புகாரி ரஹ்மான், துணை அதிபர் அப்துல் காதிர் புகாரி ரஹ்மான், சி.ஐ.ஐ.சி. தலைமை நிர்வாக அதிகாரி பர்வேஷ் ஆலாம் ஆகியோர் வரவேற்று பேசினர்.

    மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    நாட்டிலேயே தமிழ்நாடு மாநிலம் தான் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த சேவை துறையில் ஒரு முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. தமிழ்நாட்டில் மிகத் திறமையான படித்த இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. தமிழ்நாட்டின் திறன்மிக்க இளைஞர்களை பற்றி உலக அளவில் பேசப்படுகிறது. இதர மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் மட்டும்தான் சென்னை தவிர மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, கன்னியாகுமரி, சேலம் போன்ற இரண்டு மற்றும் மூன்று அடுக்கு நகரங்களில் தகவல் தொழில்நுட்ப துறை மாணவர்களுக்கு பயிற்சியும் கல்வியும் சீராக வழங்கப்படுகிறது. இந்த ஒரு சூழலை வேறு எந்த மாநிலத்திலும் காண முடியாது. தகவல் தொழில் நுட்பவியல் துறையில் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க ஆழ்ந்த அதிநவீன மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு ஐ.டி.என்.டி. ஹப் எனும் தகவல் தொழில்நுட்ப திட்டத்தை உருவாக்கியுள்ளது.

    உலக அளவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் சிக்கல்கள், சவால்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு தமிழ்நாட்டில் தீர்வு காண முடியும் என்பதன் நோக்கத்துடன் இமாஜின் சென்னை எனும் மூன்று நாள் மாநாடு வருகிற 23, 24, 25 -ந்தேதிகளில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் உலக அளவில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறையை சார்ந்த மாபெரும் நிறுவனங்களின் தலைவர்கள், வல்லுநர்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர்கள் போன்ற நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த இமேஜின் சென்னை மாநாட்டில் இளைஞர்கள் பதிவு செய்து பங்கேற்று உங்களது புதுமையான யோசனைகளை பகிர்ந்து உலகளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டிருக்கும் மேம்பாடுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்.

    மாநாட்டில் மைட்டி ஸ்டார்டப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜீத் விஜய், ரெஜிஸ்டாரர் ராஜா உசேன், முருகேசன் உட்பட ஏராளமான தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×