என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் மினிபேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
- அந்த மினிபேருந்தும் சில நேரங்களில் முறையாக இயக்கப்படு வதில்லை.
- மினி பேருந்தை பொது மக்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள பெத்த கொள்ளு கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்திற்கு அரசு பஸ்கள் இயக்குவதில்லை. மேலும் தனியார் மினி பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் அந்த மினிபேருந்தும் சில நேரங்களில் முறையாக இயக்கப்படு வதில்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் அவதி அடைந்தனர்.
இதையடுத்து இன்று காலை ஓசூர்- பெத்த கொள்ளு என்ற கிராமத்திற்கு சென்ற மினி பேருந்தை பொது மக்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பகுதிக்கு அரசு பேருந்து இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Next Story






