என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்தூரில் எம்.ஜி.ஆர்.பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
    X

    மத்தூரில் எம்.ஜி.ஆரின் 106 -ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.துணை போது செயலாளர் கே.பி.முனுசாமி பேசிய காட்சி.

    மத்தூரில் எம்.ஜி.ஆர்.பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

    • எம்.ஜி.ஆரின் 106 - ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொது கூட்டம் நடைபெற்றது.
    • வேப்பனப்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.பி.முனுசாமி கலந்து கொண்டார்.

    மத்தூர், ஜன.23-

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பேருந்து நிலையத்தில் எம்.ஜி.ஆரின் 106 - ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொது கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்Lத்திற்கு ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. டி.எம். தமிழ்செல்வம் தலைமை வகித்தார். மத்தூர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சக்கரவர்த்தி, தேவராசன், ஊத்தங்கரை அ.தி.மு.க. ஒன்றிய செயலார்கள் எக்கூர் வேடி, வேங்கன் ஆகிேயார் வரவேற்றார்.

    இக்கூட்டத்திற்கு ஊத்தங்கரை தொகுதி முன்னால் எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.தென்னரசு முன்னால் எம்.எல்.ஏ.முனி வெங்கட்டப்பன், மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. துணை பொது செயலாளரும், வேப்பனப்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.பி.முனுசாமி கலந்து கொண்டார். முன்னதாக தலைமை கழக பேச்சாளர் ஏ.வி.சி.கோபி பேசினார். இக் கூட்டத்தில் மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் பியாரேஜான், மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி, அ.தி.மு.க. ஒன்றிய இணை செயலாளர் ஜெயந்தி புகழேந்தி, ஒன்றிய அவைத் தலைவர் சென்னகிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, இந்தியாஸ் ஷாஜஹான், சிவம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் மனோகரன், இராமகிருஷ்ணம்பதி ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா ராமன், ஆனந்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பவித்ரா சிலம்பரசன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் முருகன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் துணைத் தலைவர் வினாயமூர்த்தி, ஒன்றிய மீணவரணி செயலாளர் எம்.ஆர்.முனுசாமி, மாவட்ட மாணவரணி இணை செயலாளர் டி.ஜெகன், தகவல் நுட்ப பிரிவு பூபதி, இளம் பாசறை பாண்டியன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×