search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாதா பிறப்பு பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்
    X

    மாதா பிறப்பு பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

    • திருக்கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்து பூண்டி புதுமை மாதாவின் பிறப்பு பெருவிழாவை தொடங்கி வைக்கிறார்.
    • நவநாட்கள் எனப்படும் விழா நாட்களில் தினமும் மாலையில் சிறுதேர்பவனியும் சிறப்பு திருப்பலியும் நடைபெறும்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி -கல்லணை சாலையில் அமைந்துள்ளது பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதா பேராலயம்.

    பூண்டி புதுமை மாதா பேராலயத்தில் மாதா பிறப்பு பெருவிழா நாளை (செவ்வாய்) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கு கிறது.

    நாளை மாலை பூண்டி மாதாவின் உருவம் வரையப்பட்ட திருக்கொடியை பக்தர்கள் ஏந்தி வர பூண்டி மாதா பேராலயத்தின் முன்புறமுள்ள கொடி மரத்தில் கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் திருக் கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்து பூண்டி புதுமை மாதாவின் பிறப்பு பெரு விழாவை தொடங்கி வைக்கிறார்.

    கொடியேற்றத்தினை தொடர்ந்து மரியாள்-புதுமைகளின் அன்னை என்ற தலைப்பில் கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி அடிகளார் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்படும்.

    நவநாட்கள் எனப்படும் விழா நாட்களில்தினமும் மாலையில் சிறுதேர்ப வனியும் சிறப்பு திருப்பலி அருட்தந்தையர்கள் பீட்டர் பிரான்சிஸ், ஜான்சன், சேவியர் டெரன்ஸ், அடைக்கலம், ஆல்பர்ட், அகிலன் சர்பிரசாதம், பெர்க்மான்ஸ் அருள்தாஸ், சூசை மாணிக்கம், இன்ன சென்ட் ஆகியோரால் நிறைவேற்றப்படும்.

    பூண்டி புதுமை மாதாவின் பிறப்பு நாளாக கருதப்படும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ம் தேதி மாலை மரியாள் -எளிமையின் எடுத்துக்காட்டு இன்று மையக்கருத்தை வைத்து சிறப்பு திருப்பலியை கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் நிறைவேற்றுவார்.

    அதனை தொடர்ந்து இரவு 9.30 மணி அளவில் மல்லிகை மலர்களாலும் சிறப்பு மின் விளக்கு அலங்காரத்திலும் பூண்டி அன்னை யின் சொரூபம் வைக்க ப்படும்.

    அலங்காரத் தேர்ப வனியை பிஷப் அந்தோ ணிசாமி புனிதம் செய்து தொடங்கி வைப்பார்.

    தேர்பவனி நிறைவடைந்த உடன் (செப்டம்பர்) 9-ம்தேதி காலை மரியாள் -தாய்மையின் தலைப்பேறு என்ற பொருளில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும்.

    அதன் பின்னர் கொடி இறக்கப்பட்டு பூண்டி மாதா திருத்தல பேராலயத்தில்பூண்டி புதுவை மாதாவின் பிறப்பு பெருவிழா நிறைவு பெறும்.

    விழா ஏற்பாடுகளை அதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தையர்அருளானந்தம், ஜோசப் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

    பூண்டி மாதாவின் பிறப்பு பெரு விழாவை ஒட்டி கோயில் வளாகத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை பூண்டி பேராலய அதிபர் சாம்சன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×