என் மலர்
உள்ளூர் செய்திகள்

போக்சோவில் கைது செய்யபட்ட வாலிபர்களை படத்தில் காணலாம்.
சிறுமி திருமணம்; 2 வாலிபர்கள் மீது போக்சோ பாய்ந்தது
- ஊத்தங்கரை அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர்.
- அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம். ஊத்தங்கரை அருகே உள்ள வெங்கட தன்பட்டியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் சபரிநாதன் (வயது28). அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் பரிட்சித்த ராஜன் (25). இருவரும் துணி வியாபாரம் செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும், பரிட்சித்த ராஜனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து பரிட்சித்த ராஜன் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை அழைத்து சென்று திருமணம் செய்துள்ளார். இதற்கு சபரிநாதன் அடைக்கலம் அளித்து உதவியுள்ளார்.
இது குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சபரிநாதன், பரிட்சித்த ராஜன் 2-பேர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.






