என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில்  போலீசாரின் செயல்பாடுகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு
    X

    மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் போலீசாரின் செயல்பாடுகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு

    • 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் போலீஸ் நிலையம் வரவழைக்கப்பட்டனர்.
    • மாணவிகளுக்கு உண்டான பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்று ஆலோசனைகள் வழங்கினார்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் ஆலோசனைப்படி மாணவ மாணவிகளுக்கு போலீஸ் நிலைய செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரண்ட‌அள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் போலீஸ் நிலையம் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்களுக்கு போலீசாரின் செயல்பா டுகள் குறித்து விளக்கமளித்த மாரண்டஅள்ளி போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் தணிகாசலம் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணத்தை தடுத்தல், மாணவிகளுக்கு உண்டான பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்று ஆலோசனைகள் வழங்கினார்.

    Next Story
    ×