என் மலர்
உள்ளூர் செய்திகள்

செருப்பு கடையில் திருடிய ஆசாமி கைது
- கடையின் சுவரில் துளை போடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- ஹபீப் (56) என்பவர்தான் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
தருமபுரி,
தருமபுரியை அடுத்த டேகிஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அபு (வயது 48). இவர் திருப்பத்தூர் சாலையில் செருப்பு மொத்த விற்பனை கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு சென்ற அபு நேற்று காலை வந்து பார்த்தபோது கடையின் சுவரில் துளை போடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் இருந்த ரூ.1,500 திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து தருமபுரி நகர போலீசில் அபு புகார் செய்தார்.
போலீசார் விரைந்து வந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்ததில் அதே பகுதியை சேர்ந்த ஹபீப் (56) என்பவர்தான் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரூ.1,500-ஐ திருட சுவற்றில் துளை போட்ட சம்பவம் நகைச்சுவையாக பேசப்படுகிறது.
Next Story