என் மலர்
உள்ளூர் செய்திகள்

புனித மலர்மலை மாதாவின் தேர் பவனி நடைபெற்ற காட்சி.
மலர்மலை மாதா திருத்தல தேர் திருவிழா
- கடந்த 3-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
- பவனி வந்த தேரின் மீது பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றினை தூவி தங்களது நேர்த்திகடனை செலுத்தினார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி அருகே புஷ்பகிரி புனித மலர்மலை மாதா திருத்தல தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 3-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
இந்த தேர் திருவிழாவின் போது, நாள்தோரும் ஆலயத்தின் பங்கு தந்தையர்களால் ஜெபங்களுடன், சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இவ்விழாவின் இறுதிநாளில் திருத்தேர் பவணி வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தில் தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி பூஜையுடன் புது நன்மை மற்றும் உறுதிபூசூதல் ஆகிய அருட்கொடைகள் சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் வழங்கப்பட்டது.
பின்னர், புனித மலர்மலை மாதாவின் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி நடைபெற்றது. வானவேடிக்கையுடன் தொடங்கிய தேர் பவணியை, மறைவட்ட முதன்மைக்குரு . ஜார்ஜ் புனித நீர் தெளித்து, மந்திரித்து தொடக்கி வைத்தார். பவனி வந்த தேரின் மீது பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றினை தூவி தங்களது நேர்த்திகடனை செலுத்தினார்கள்.
இந்த திருவிழாவில், கிருஷ்ணகிரி, சுண்டம்பட்டி, எலத்தகிரி, கந்திகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான கிருஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.






