என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் 18-ந் தேதி மின்தடை
- ஓரிக்கை துணை மின் நிலையத்தில் வருகிற 18-ந்தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
- காஞ்சிபுரம் நகரில் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
காஞ்சிபுரம்:
ஓரிக்கை துணை மின் நிலையத்தில் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரில் சில பகுதிகளான, வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரைமண்டபம், ரங்கசாமி குளம் பகுதிகள் காமராஜர் வீதி, மேட்டுத்தெரு, சின்னகாஞ்சிபுரம், பெரியார் நகர், தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர் பகுதி, ஐயம்பேட்டை, ஓரிக்கை, ஓரிக்கை தொழிற்பேட்டை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகள், செவிலிமேடு, பாலாறு தலைமை நீரேற்றம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
இத்தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் காஞ்சிபுரம்/வடக்கு கோட்ட செயற்பொறியாளர் சரவணதங்கம் தெரிவித்துள்ளார்.
Next Story






