என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    மகாபாரத சொற்பொழிவு விழா
    X

    மகாபாரத சொற்பொழிவு விழா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மகாபாரத சொற்பொழிவு அக்னி பெருவிழா நேற்று தொடங்கியது.
    • முதல் நாளாக சந்திரன் மரபினில் சுந்தரன் சந்தனு என்ற தலைப்பில் பிரசங்கம் தொடங்கியது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் 20-வது மகாபாரத சொற்பொழிவு அக்கினி பெருவிழா நேற்று தொடங்கியது.

    அடுத்த மாதம் 10-ந்தேதி வரை 19 நாட்கள் மகாபாரத சொற்பொழிவு மற்றும் அதனை தொடர்ந்து நாடகங்கள் நடைபெ றுகின்றன. மொத்தம் 14 நாடகங்கள் நடைபெற உள்ளன. மணிவாசகம் மகாபாரத சொற்பொழிவு ஆற்றுகிறார். வெங்கடேசன் கவி பாடல் பாடுகிறார். ஒன்னியம்பட்டி ராதாகிருஷ்ணன் நாடக சபா சார்பில் பழனி வாத்தியார், ராஜ்குமார் ஆகியோர் நாடகம் நடத்துகின்றனர்.

    நேற்று தொடங்கிய மகாபாரத சொற்பொழிவில் முதல் நாளாக சந்திரன் மரபினில் சுந்தரன் சந்தனு என்ற தலைப்பில் பிரசங்கம் தொடங்கியது.

    இன்று திருதராட்டிரன், பாண்டு, விதுரன் பிறப்பு குறித்து பிரசங்கம் நடைபெற உள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் சொற்பொழிவு நடைபெற உள்ளது. 9.3.2023 (வியாழக்கிழமை) அன்று காலை துரியோதனன் படுகளம் குறித்த பிரசங்கம் நடைபெறும்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தாக்கள் வெள்ளாளப்பட்டி துரைசாமிகவுண்டர், கோனையம்பட்டி மணி, மகாபாரத தர்மகர்த்தா சகாதேவகவுண்டர் மகன் குட்டூர் தர்மலிங்கம் மற்றும் நாயக்கன்கொட்டாய், வெள்ளாளப்பட்டி, செல்லன்கொட்டாய், கதிர்நாயக்கனஅள்ளி, மண்டிகாலன்கொட்டாய், புளியம்பட்டி, சீராம்பட்டி, மூலக்காடு உள்ளிட்ட 22 கிராம ஊர் கவுண்டர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×