என் மலர்
உள்ளூர் செய்திகள்

நல்லுசாமி
வியாபாரி வீட்டில் நகை திருட்டு
- மதுரையில் வியாபாரி வீட்டில் 11 பவுன் நகை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
- மதுரை சிந்தாமணி இந்திரா காலனியை சேர்ந்தவர் ஆவார்.
மதுரை
மதுரை சிந்தாமணி இந்திரா காலனிைய சேர்ந்தவர் மணீஸ்வரன் (வயது 32). இவர் அதே பகுதியில் வெல்டிங்பட்டறை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்த 11 பவுன் நகை திருடுபோனது. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. குற்றவாளியை கைது செய்ய போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
அதன்பேரில் தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வை யில், தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் ஆலோசனையில் கீரைத்துறை இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லாபாய் தலை மையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீசார் திருடுபோன பீரோவில் பதிவான கைரேகையை வைத்து விசா ரித்தபோது மணீஸ்வரன் வெட்டிங் பட்டறையில் வேலை பார்க்கும் இந்திரா நகரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் நல்லுசாமி (22) என்பவர் நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து செய்தனர். திருட்டு நடந்த 6 மணி நேரத்தில் போலீசார் குற்ற வாளியை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






