search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இணைப்பு குழாய் உடைந்து வயல்களுக்குள் வீணாகும் குடிநீர்
    X

    குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதை படத்தில் காணலாம்.

    இணைப்பு குழாய் உடைந்து வயல்களுக்குள் வீணாகும் குடிநீர்

    • இணைப்பு குழாய் உடைந்து வயல்களுக்குள் ஓடி குடிநீர் வீணாகிறது.
    • எந்தவித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் இரும்பாடி வைகை ஆற்றுப் பகுதியில் இருந்து மன்னாடி மங்கலம்-காடுபட்டி வழியாக திருமங்கலம் நகராட்சிக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. காடு பட்டி பகுதியில் இந்த குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.

    தற்போது தென்கரை கண்மாய் செல்லும் வழியில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வயல்களுக்குள் சென்று வீணாகி வருகிறது. குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் குடிநீர் வீணாக வயல்களுக்குள் புகுவதால் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளி யேறி வீணாகி வருகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால் தமிழ்நாடு அரசு குடிநீர் வடிகால் வாரியம், மதுரை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து இரும்பாடி முதல் திருமங்கலம் வரை குழாய்களின் இணைப்பை உறுதி செய்ய வேண்டும்.

    ஆங்காங்கே ஏற்பட்டுள்ள சிறிய உடைப்புகளை சரி செய்து மீண்டும் உடைப்பு ஏற்படா மல் இருக்கவும், குடிநீர் வீணாக வெளியேறாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×