என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய வாலிபர்: 4 ஆண்டுகளுக்கு பின்பு கைது
  X

  திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய வாலிபர்: 4 ஆண்டுகளுக்கு பின்பு கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய வாலிபர் ,4 ஆண்டுகளுக்கு பின்பு கைது செய்யப்பட்டார்.
  • 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் அவர் மேலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

  மேலூர்

  மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் அழகுராஜா (வயது 30). இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு அருகில் உள்ள மணப்பட்டியைச் சேர்ந்த இளம் பெண்ணிடம் பழகினார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு அவரை தாக்கி உள்ளார்.

  இதுகுறித்து இளம் பெண் கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் அப்போது புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அழகுராஜாவை தேடி வந்தனர்.

  அவர் சில நாட்களில் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டது தெரியவந்தது. மதுரை மாவட்ட போலீசார் அழகுராஜாவை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தது. விமான நிலையங்களுக்கு நோட்டீசும் கொடுத்தனர். 4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த அழகுராஜா சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் சென்னை வந்தார்.இவரை குடியுரிமை அதிகாரிகள் பிடித்து மதுரை மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் சாந்தி பாலாஜி அழகுராஜாவை கைது செய்து மேலூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார். நீதிபதி முத்துக்குமார் முருகதாஸ் அழகுராஜாவை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் அவர் மேலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

  Next Story
  ×