search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ. 3.70 கோடி மதிப்பில் குளிரூட்டப்பட்ட  திருமண மண்டபம் அடிக்கல் நாட்டு விழா
    X

    அடிக்கல் நாட்டு விழா நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமையில் நடந்தது.

    ரூ. 3.70 கோடி மதிப்பில் குளிரூட்டப்பட்ட திருமண மண்டபம் அடிக்கல் நாட்டு விழா

    • ரூ. 3.70 கோடி மதிப்பில் குளிரூட்டப்பட்ட திருமண மண்டபம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • திருமண மண்டபம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

    திருமங்கலம்

    இந்து சமய அறநிலை யத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருமங்கலம் வேங்கடசமுத்திரம் காட்டு பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலம் திருமங்கலம் பாண்டியன் நகர் அருகே உள்ளது.

    இந்த இடத்தில் பொது மக்கள் பயன்படுத்தும் விதமாக திருமண மண்டபம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது இதையடுத்து மண்டபம் கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்ய ப்பட்டு அனுப்பி வைக்க ப்பட்டது.

    தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் காட்டு பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 3.70 கோடி மதிப்பீட்டில் குளிரூட்டப்பட்ட திருமண மண்டபம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

    மண்டபத்தில் ஒரே நேரத்தில் 268 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய வசதியுடன் 238 பேர் ஒரே நேரத்தில் சாப்பிடும் விதமாகவும் 15,000 சதுர அடியில் மண்டபம் கட்டப்படவுள்ளது. இந்த பூமி பூஜையில் திருமங்கலம் நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், வினோத் மற்றும் நிர்வாக அதிகாரி ரம்யா சுபாஷினி, தக்கார் சக்கரை அம்மாள், திருமங்கலம் அறநிலைய துறை ஆய்வாளர் சாந்தி, கோவில் உதவி அலுவலர் தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×