என் மலர்
உள்ளூர் செய்திகள்

புனலூர்-கொல்லம் புதிய மின்மய அகல ெரயில் பாதை
- புனலூர்-கொல்லம் புதிய மின்மய அகல ெரயில் பாதையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
- இதற்கான தொடக்க விழா கேரள மாநிலம் கொச்சியில் இன்று மாலை 6 மணியளவில் நடக்க உள்ளது.
மதுரை
இந்தியாவில் உள்ள அனைத்து ெரயில் பாதை களும் மின்மயமாக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை கோட்டத்தில் புனலூர்- கொல்லம் இடையேயான அகல ரெயில் பாதை, ரூ.76 கோடி செலவில் மின்மய மாக்கப்பட்டுள்ளது.
இதற்கான தொடக்க விழா கேரள மாநிலம் கொச்சியில் இன்று மாலை 6 மணியளவில் நடக்க உள்ளது. அப்போது பிரதமர் மோடி புனலூர்- கொல்லம் அகல மின் ெரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அப்போது அவர் ஒரு சிறப்பு ெரயிலையும் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இதைத் தொடர்ந்து டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படும் கொல்லம் -புனலூர் ெரயில்கள், நாளை (2-ந் தேதி) முதல் மின்சார ெரயில் பாதை மூலம் இயக்கப்பட உள்ளது.
Next Story