search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மனநல சேவை திட்டம்
    X

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நடந்த விழாவில் கலெக்டர் அனீஷ்சேகர், டீன் ரத்தினவேல் மற்றும் பலர் கலந்து கொண்டார்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மனநல சேவை திட்டம்

    • மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மனநல சேவை திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • தமிழகம் முழுவதும் மனநோயாளிகள் நலனை பேணும் வகையில், மக்கள் நல்வாழ்வுத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    மதுரை

    தமிழகம் முழுவதும் மனநோயாளிகள் நலனை பேணும் வகையில், மக்கள் நல்வாழ்வுத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் நல்லாதரவு மன்றம் (மனம்), 'நட்புடன் உங்களோடு மனநல சேவை' ஆகிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    அதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ நிலையத்தில் இன்று காலை நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    இதன் ஒரு பகுதியாக மதுரை அரசு மருத்து வமனை கருத்தரங்கு கூடத்தில் மனநல சேவைக்கான தொடக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர், மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல், மாவட்ட சுகாதாரத் துறை இயக்குனர் அர்ஜுன் குமார், அரசு ஆஸ்பத்திரி மனநல சிகிச்சை பிரிவு துறை தலைவர் அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மனநல சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் பள்ளிகளுக்கு 2 ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் பயிற்சிகள் தரப்பட உள்ளன.

    பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மனநல பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சேவை செய்யும் வகையில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. அதுவும் தவிர தமிழகத்தில் உள்ள அரசு மனநல மருத்துவ மையங்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் 75 அவசரகால ஆம்புலன்ஸ்களும் வழங்கப்பட உள்ளன.

    Next Story
    ×