search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டதற்காக மக்கள் வருந்துகிறார்கள்- எம்.எல்.ஏ. பேச்சு
    X

    பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார். அருகில் நடிகர் வையாபுரி, மாவட்ட இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பூமிபாலகன், ஜெயச்சந்திரன் மற்றும் பலர் உள்ளனர். 

    தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டதற்காக மக்கள் வருந்துகிறார்கள்- எம்.எல்.ஏ. பேச்சு

    • தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டதற்காக மக்கள் வருந்துகிறார்கள் என பொதுக்கூட்டத்தில் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.
    • அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டு நிறைவையொட்டி திருப்பரங்குன்றம் ஒன்றியம் சார்பில் நிலையூர் கைத்தறி நகரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.

    மதுரை

    அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டு நிறைவையொட்டி மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் சார்பில் நிலையூர் கைத்தறி நகரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.

    ஒன்றிய செயலாளர் கவுன்சிலர் நிலையூர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் வரவேற்று பேசினார்.

    பொதுக்கூட்டத்தில் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தலைமைகழக பேச்சாளர் நடிகர் வையாபுரி ஆகியோர் பேசினர்.

    ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    கடந்த சட்டசபை தேர்தலில் மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சிக்கு வந்துவிட்டது. நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என்றார்கள். முதியோர் ஓய்வூதியம் உயர்த்தி வழங்குவோம் என்றார்கள். பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்றார்கள். சிலிண்டர் மானியம் 100 ரூபாய் கொடுக்கப்படும் என்றார்கள்.

    இப்படி எந்த ஒரு வாக்குறுதியையும் அவர்கள் இதுவரை நிறைவேற்ற வில்லை. தி.மு.க.வினர் சொன்ன பொய்களை எல்லாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

    கடந்த தேர்தலில் சிறிய வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தா லும் அந்த கட்சிக்கு வாக்க ளித்ததற்காக மக்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்கள். தமிழகத்தில் இப்போது எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு அமைதி குலைந்து இருக்கிறது.

    ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை யெல்லாம் மறைத்து தின மும் விளம்பரம் தேடிக்கொண்டிருக்கி றார். அமைச்சர்கள் மக்கள் நலனை பற்றி கவலைப்படுவதில்லை.

    தங்களது வளர்ச்சிக்கா கவே நிர்வாகத்தை செய்கி றார்கள். எனவே எப்போது மீண்டும் தேர்தல் வரும் என்று தமிழக மக்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

    நான் நிச்சயமாக கூறுகிறேன். வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வரும். அந்த தேர்தலில் தமிழக மக்கள் அனைவரும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழகத்தில் நிரந்தர முதலமைச்சராக அரியணையில் அமரும் வகையில் மகத்தான வெற்றியை தருவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.என்.ராஜேந்திரன், ஓம். கே.சந்திரன், பூமி பாலகன், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×