என் மலர்
உள்ளூர் செய்திகள்

பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ பிரதமர் மோடி குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்தார்.
- பா.ஜனதா ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருமங்கலம்
ஐ.நா.சபை கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ பிரதமர் மோடி குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்தார். இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் மந்திரி பிலாவல் பூட்டோவை கண்டித்து திருமங்கலத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாநில கூட்டுறவு பிரிவு தலைவர்-முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம், மாநில பொருளாதார பிரிவு தலைவர்-அன்னை பாத்திமா கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா, முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன் ஆகியோர் பேசினர்.
நகர செயலாளர் விஜ யேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் சரவணகுமார், பொதுச் செயலாளர் சின்னசாமி, மாநில பொருளாதாரபிரிவு செயலாளர் நிரஞ்சன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.






