என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சர் வருகையால் விழாக்கோலம் பூண்ட மதுரை
- முதல்-அமைச்சர் வருகையால் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டது.
- இதில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் திரண்டு வரவேற்பு அளித்தனர்.
மதுரை
மதுரை புதுநத்தம் சாலை–யில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா இன்று மாலை கோலாகலமாக நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நூலகத்தை திறந்து வைக்கி–றார். தொடர்ந்து ஆயுதப்படை மைதானத்தில் நடை–பெறும் விழாவில் கலந்து–கொண்டு நலத்திட்ட உதவிக–ளையும் வழங்குகிறார்.
இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை அவர் விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையம் முதல் ஐராவதநல்லூர் வரை தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பல்லாயி–ரக்கணக்கானோர் அணி–வகுத்து நின்று வழி நெடுகி–லும் முதல்- அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்த–னர்.
மாநகரின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க. கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. மேலும் ஆங்காங்கே சிறிய அளவி–லான மேடை அமைத்து அங்கு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தெப்பக்குளத்தில் இருந்து அரசு விருந்தினர் மாளிகை வரை மாநகர தி.மு.க.வினர் முதல்-அமைச்சரை உற்சா–கமாக வரவேற்றனர்.
அரசு சுற்றுலா மாளிகை–யில் மதிய உணவை முடித்து விட்டு மாலை 4.30 மணி அளவில் கலைஞர் நூலக திறப்பு விழாவுக்கு செல்கி–றார். பின்னர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ள மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கி–றார்.
மதுரை நகரில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல்-அமைச்சரை வர–வேற்பதற்காக கொடிகள், தோரணங்கள் கட்டப்பட் டுள்ளன. முதல்-அமைச்ச–ரின் வரவேற்பு பணிகளை மேற்பார்வை செய்வதற்காக ஏராளமான புதிய நிர்வாகி–கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக சுமார் 80 ஆயி–ரம் பேர் முதல்-அமைச் சரை வரவேற்பதற்காக திரண்ட–னர்.
மேலும் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் சுயஉதவி குழுவினர் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வரவேற்புக்கான ஏற்பா–டுகளை மாவட்ட செயலா–ளர்கள் அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ. மற்றும் மணிமாறன் செய்துள்ளனர்.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.






