கமலஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் அனுமன் ஜெயந்தி விழா

கமலஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் அனுமன் ஜெயந்தி விழா 23-ந் தேதி தொடங்குகிறது. கலசம் மேளதாளத்துடன் வீதி உலா நடக்கிறது.
கைத்தல கமல ஜெயவீர ஆஞ்சநேயர்
கைத்தல கமல ஜெயவீர ஆஞ்சநேயர்
Published on

மதுரை

மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் தென்மாட வீதியில் உள்ள கைத்தல கமல ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற 23-ந் தேதி முதல் 25-ந்தேதி வரை அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.

முதல் நாள் காலை 6 மணிக்கு விஷ்வக்சேன பூஜை, கலச ஆராதனை, ஹோமம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு ஆஞ்சநேயர் கலசம் மேளதாளத்துடன் வீதி உலா நடக்கிறது. 12.30 மணிக்கு சமாராதனையும், மாலை 6.30 மணிக்கு ஆஞ்சநேயர் வீதி உலாவும் நடைபெறும். இரவு 8.30 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரி நடக்கிறது.

இதேபோல் 2-வது நாள் இரவு 7 மணிக்கு பக்தி சொற்பொழிவு நடக்கிறது. இதனை தொடர்ந்து 12 ராசிகளுக்கான பலன் மற்றும் பரிகாரங்கள் கூறப்படுகிறது. 3-வது நாளில் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், பரதநாட்டியம், கோலாட்டம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com