என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைத்து ஜீவராசிகளின் உரிமையையும் காப்பது நமது கடமை
    X

    கருத்தரங்கில் பங்கேற்ற மதுரை ஐகோர்ட்டு நீதிபதி சுவாமிநாதனுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

    அனைத்து ஜீவராசிகளின் உரிமையையும் காப்பது நமது கடமை

    • உலகின் அனைத்து ஜீவராசிகளின் உரிமையையும் காப்பது நமது கடமை மனித உரிமை கருத்தரங்கில் ஐகோர்ட்டு நீதிபதி பேசினார்.
    • கருத்தரங்கின் நோக்கம் குறித்து உதவி பேராசிரியர் முத்துக்குமார் எடுத்துரைத்தார்.

    மதுரை

    மதுரை சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வி இயக்ககம் சார்பில் உலக மனித உரிமை தினத்தையொட்டி ''மனித உரிமை மற்றும் நீதியின் சவால்கள்'' என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது.

    முதல்வர் பால கிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பங்கேற்றார். அவர் பேசுகையில், மனித உரிமை என்பது மனிதர்களை மட்டுமல்லாது இயற்கை யையும், பிற உயிர்களையும் பாதுகாப்பது ஆகும். மனி தர்களை போல பிற ஜீவரா சிகளுக்கும், மரங்கள் செடி, கொடிகளுக்கும், இயற்கைக்கும் அனைத்தை யும் பெற உரிமை உண்டு.

    நாம் மனித உரிமையை மட்டுமல்லாது மற்ற அனைத்தையும் பாது காத்தால் மட்டுமே ஒட்டு மொத்தமாக முன்னேற முடியும். ஒவ்வொருவரும் மனித உரிமையை காப்பது அவசியம் என்றார்.

    கருத்தரங்கின் நோக்கம் குறித்து உதவி பேராசிரியர் முத்துக்குமார் எடுத்துரைத்தார். இணை பேராசிரியர் குமரன் நன்றி கூறினார். சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய் பிரியா, மனித உரிமை அரசு வக்கீல் கணேஷ் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×