search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரிதிமாற் கலைஞரின் பிறந்த நாளை செம்மொழி தினமாக அறிவிக்க பேரன் கோரிக்கை
    X

    பரிதிமாற் கலைஞர் வெண்கல சிலைக்கு மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது எடுத்த படம்.

    பரிதிமாற் கலைஞரின் பிறந்த நாளை செம்மொழி தினமாக அறிவிக்க பேரன் கோரிக்கை

    • பரிதிமாற் கலைஞரின் பிறந்த நாளை செம்மொழி தினமாக அறிவிக்க பேரன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • தமிழ்மொழி பற்றால் தனது பெயரை பரிதிமாற் கலைஞர் என மாற்றி ஏராளமான தமிழ் நூல்கள் இயற்றினார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் தாலுகா விளாச்சேரியை சேர்ந்தவர் சூரிய நாராயண சாஸ்திரி. தமிழ்மொழி பற்றால் தனது பெயரை பரிதிமாற் கலைஞர் என மாற்றி ஏராளமான தமிழ் நூல்கள் இயற்றினார். தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என முதல் குரல் கொடுத்தவர் பரிதிமாற் கலைஞர்.

    அவரது நினைவு தினமான இன்று விளாச்சே ரியில் உள்ள நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு அனைத்து கட்சி பிரமுகர்கள் மாலை யணிவித்து மரியாதை செலுத்தினர். மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் மதுரை வருவாய் கோட்டாட்சியர் சுகி பிரேமலா மாலைய ணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தி.மு.க. சார்பில் மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றத்தலைவர் அய்யல்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஊராட்சி மன்றத்தலைவர் முருகன், துணைத்தலைவர் குறும்பன், மக்கள் நல மையத்தலைவர் செல்வராஜ், பொருளாளர் அண்ணாமலை, செயலாளர் குலசேகரன், அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பரிதிமாற் கலைஞரின் மகன் வழி பேரனான பேராசிரியர் கோவிந்தன் நிருபர்களிடம் கூறுகையில், பரிதிமாற் கலைஞரின் அரிய பொக்கிஷமான ஜி.யு. போப் கையெழுத்து அடங்கிய நூல்கள் மற்றும் பரிதிமாற் கலைஞர் எழுதிய முதல் பிரதி புத்தகங்கள் உட்பட தமிழ், ஆங்கிலம், இலக்கணம் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சேகரித்து வைத்துள்ளேன்.

    அதனை மதுரையில் அமைய உள்ள கலைஞர் நூலகத்துக்கு தருவதற்கு தயாராக உள்ளேன். எங்களுக்கு செய்த உதவி யின் நன்றிக்கடனாக கலைஞர் நூலகத்தில் ஒப்படைக்க தயாராக உள்ளோம். அரசு இதனை பெற்று கலைஞர் நூலகத்தில் சேர்க்க கோரிக்கை விடுத்துள்ளோம்.

    தமிழக முதல்வர் எங்களின் கோரிக்கையை ஏற்று அரிய நூல்களை மதுரை கலைஞர் நூலகத்தில் சேர்க்க எங்களது குடும்பதினரின் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறோம். மேலும் அவரது பிறந்த தினத்தை செம்மொழி நாளாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.

    Next Story
    ×