என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
By
மாலை மலர்22 Nov 2022 1:45 PM IST

- மதுரை மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 29-ந் தேதி நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை மாவட்ட வழங்கல் மற்றும் பாதுகாப்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 29-ந் தேதி (செவ்வாய்க்கி ழமை) மாைல 4 மணியளவில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் எண்ணெய் நிறுவன மேலாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர் அசோசியேசன், எரிவாயு நுகர்வோர்கள், ஆயில் மார்கெட்டிங் நிறுவன மேலாளர்கள், எரிவாயு முகவர்கள், அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட வழங்கல் மற்றும் பாதுகாப்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
X