search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னை பாத்திமா கல்லூரியில் தடய அறிவியல் கருத்தரங்கம்
    X

    கருத்தரங்கில் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    அன்னை பாத்திமா கல்லூரியில் தடய அறிவியல் கருத்தரங்கம்

    • திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரியில் தடய அறிவியல் கருத்தரங்கம் நடந்தது.
    • முன்னேற்றங்கள் பற்றி கம்ப்யூட்டர் ஸ்லைடுகள் மூலம் எடுத்துரைத்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தடய அறிவியல் துறை சார்பில் அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற "பாரன்சிக் பீயூசன்-2023" என்ற ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் கல்லூரி தாளாளர் எம். எஸ். ஷா மற்றும் பொருளா ளர் சகிலா ஷா ஆகியோரது ஆலோசனையின் பேரில் நடைபெற்றது. கருத்தரங்கை தொடங்கி வைத்து கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் பேசினார்.

    சிறப்பு விருந்தினராக அரசு மருந்தியல் கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் ஹசன் சாதலி கலந்து கொண்டு பேசுகையில், தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் குற்றங்களும் தொழில்நுட்ப ரீதியாக பெருகிவிட்டபடியால், தடய அறிவியல் துறையினரின் தேவை அதிகமாக உள்ளது.

    சைபர் கிரைம் போன்ற குற்ற வழக்குகளை துப்பு துலக்குவதற்கு தடைய அறிவியல் துறை சார்ந்த நிபுணர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். ஆகவே மாணவர்கள் தடய அறிவியலின் அனைத்து துறையிலும் நிபுணத்துவம் பெற வேண்டும் என்றார்.

    முன்னதாக தடய அறிவியல் துறை தலைவர் பேராசிரியர் சீனிவாசன் வரவேற்றார்.

    மதுரை மருத்துவக் கல்லூரி தடய அறிவியல் துறையைச் சேர்ந்த பேராசி ரியர் டாக்டர் சதாசிவம், தியாகராஜர் கல்லூரி வேதியியல் பேராசிரியர் டாக்டர் சாய் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு துறை சார்ந்த தற்போதைய முன்னேற்றங்கள் பற்றி கம்ப்யூட்டர் ஸ்லைடுகள் மூலம் எடுத்துரைத்தனர்.

    பின்னர் சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்த வர்களுக்கும், போஸ்டர்கள் மூலம் சிறந்த விளக்கத்தினை அளித்த மாணவ-மாணவிக ளுக்கும் பரிசுகள் வழங்கப் பட்டன.

    நிகழ்ச்சியை 3-ம் ஆண்டு மாணவி வர்ஷா மற்றும் அஸ்மா பாத்திமா ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர்கள் நிவேதிதா மனோகரன், ஜிஞ்சு மரியம் இமானுவேல், வினிஸ்மா, பிரிசில்லா ஜோஸ்லின் டேனியல், ஜெயஸ்ரீ, கங்கா பிரசாத், அலி பாத்திமா, ஐஸ்வர்யா ஆகியோர் தலைமையில் மாணவ- மாணவிகள் செய்திருந்தனர். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 85 பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் உட்பட 400 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் பேராசிரியர் பிரிசில்லா நன்றி கூறினார்.

    Next Story
    ×