

மதுரை
மதுரை சம்மட்டிபுரம், மேட்டு தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (36). இவரிடம் ஒத்தக்கடை, அரசரடி ஜெயச்சந்திரன் (35) என்பவர் சில மாதங்களுக்கு முன்பு ரூ. 50 ஆயிரம் கடன் வாங்கினார். இதனை அவர் குறித்த காலத்தில் திருப்பிச் செலுத்தவில்லை. எனவே செல்வம் அவரிடம் பணம் கேட்டு நச்சரித்து வந்தார்.
இந்த நிலையில் ஜெயச்சந்திரன் நேற்று மாலை நண்பர்களுடன் காளவாசல் பைபாஸ் ரோட்டில் நடந்து சென்றார். அவரிடம் செல்வம் பணத்தை திருப்பி கேட்டார். ஆத்திரம் அடைந்த ஜெயச்சந்திரன், அருண் மற்றும் ரஞ்சித் ஆகிேயார் செல்வத்தை அடித்து உதைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை தாக்கிய ஜெயச்சந்திரன், அருண், ரஞ்சித் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.