search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் தொட்டி
    X

    இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் தொட்டி

    • இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரி வீரப்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • இங்கு 1500-க்கும் மேற்பட்டோர் இருப்பதால் காவிரி தண்ணீரை மேல்நிலைத்தொட்டிக்கு அனுப்பி சப்ளை செய்யப்படுகிறது.

    திருமங்கலம்

    திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வீரப்பட்டி கிராமத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் நீர்த்தேக்க மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது. இந்த கிராமத்தில் 1500-க்கும் மேற்பட்டோர் இருப்பதால் காவிரி தண்ணீரை மேல்நிலைத் தொட்டிக்கு அனுப்பி சப்ளை செய்யப்படுகிறது. சில மாதங்களாக குடிநீர் நீர்த்தேக்க மேல்நிலைத் தொட்டியின் அடிப்பகுதி சேதமடைந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது.

    ேமலும் இந்த தொட்டி அருகே பாதுகாப்பு இல்லாத திறந்த வெளி கிணறு உள்ளது. 10 அடி தூரத்தில் பள்ளி இருப்பதால் மாணவ-மாணவிகள் இந்த பகுதியில் அடிக்கடி வந்து விளையாடி வருகின்றனர். இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கிராமமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. உயிர் பலி ஏற்படும் முன்பு மேல்நிலைத் தொட்டியை சீரமைக்க வேண்டும். திறந்த வெளியில் உள்ள கிணற்றை மூட வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×