என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆவின் பால் பாக்கெட்டுகளில் 'செஸ் தம்பி' சின்னம்
- ஆவின் பால் பாக்கெட்டுகளில் ‘செஸ் தம்பி’ சின்னம் அச்சிடப்பட்டுள்ளது.
- இது வாடிக்கையர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை
சென்னை மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.
இதையொட்டி பல்வேறு மாவட்டங்களுக்கு ஒலிம்பிக் ஜோதி கொண்டு செல்லப்படுகிறது. மதுரைக்கு நேற்று ஒலிம்பிக் ஜோதி வந்தது. அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பெரிய கருப்பன் ஆகியோர் ஜோதியை பெற்றுக்கொண்டனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை நினைவுபடுத்தும் வகையில் மதுரை மாவட்ட ஆவின் பால் பாக்கெட்டுகளில் ''செஸ் தம்பி'' உருவம் பொறிக்கப்பட்டு உள்ளது. இது வாடிக்கையர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






