என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
தொழில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை
By
மாலை மலர்27 Oct 2022 3:23 PM IST

- தென் தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- மதுரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மதுரை
மதுரை ெரயில் நிலையம் எதிரே தனியார் நிறுவனத்தின் புதிய தொழில்நுட்ப மையத்தை, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென் தமிழகத்தை நோக்கி தொழில் முதலீடுகள் வர வேண்டும் என்று தமிழக முதல்வர் ஆர்வம் காட்டி வருகிறார். தமிழகத்தில் வட மாவட்டங்களை விட, தென் தமிழகத்தை மையமாக வைத்து புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மதுரையில் டைடல் பார்க், சிப்காட் ஆகியவை அமைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மதுரை-தூத்துக்குடி வழித்தடத்தில் அதிக அளவிலான தொழில் முதலீடுகள் வந்து உள்ளன. நடப்பாண்டில் தென் தமிழகத்தை மையப்படுத்தி புதிய தொழில் முதலீடுகள் ஈர்க்கப்படும். இதனால் தென் தமிழகம் புதிய வளர்ச்சி பாதைக்கு செல்லும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
X