search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆபத்தை ஏற்படுத்தும் பாதாள சாக்கடை
    X

    ஆபத்தை ஏற்படுத்தும் பாதாள சாக்கடை

    • செல்லூர்-பந்தல்குடி சாலையில் ஆபத்தை ஏற்படுத்தும் பாதாள சாக்கடையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி 26-வது வார்டு செல்லூர்- பந்தல்குடி சாலையில் இருந்து நரிமேடு செல்லும் சாலையில் நீண்ட நாட்களாக திறந்த நிலையில் பாதாள சாக்கடை உள்ளது.

    அதிக வாகனங்கள் மற்றும் பள்ளிக்கு குழந்தை கள் செல்லும் சாலையில் திறந்த நிலையில் பாதாள சாக்கடை இருப்பது ஆபத்தை ஏற்படுத்தும்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் அப்பகுதி சாலைகள் மோசமாக இருப்பதால் சாலையில் தண்ணீர் தேங்கி விடுவதால் பாதாள சாக்கடை இருப்பது தெரியாது.

    மாநகராட்சியில் இருந்து அதில் தடுப்பு அமைக்கப்பட்டாலும் வாகனம் செல்ல வழியின்றி யாராவது அதை நகர்த்தி விட்டால் பாதசாரிகள் அல்லது பள்ளி மாணவர்கள் பாதாள சாக்கடையில் விழும் நிலை உள்ளது

    மாநகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை மூடி அமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அரசரடியில் இருந்து காளவாசல் செல்லும் வழியில் எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல் மெயின் ரோட்டில் சில நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.

    இந்த பகுதியில் சில வாரங்களுக்கு முன்புதான் அந்த தண்ணீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தனர். இதனால் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. அதே இடத்தில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர் வீணாகிறது.

    இதை மாநகராட்சி நிர்வாகம் சரி செய்து பெரிய அளவில் உடைப்பு ஏற்படும் முன்பு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×