search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.9.30 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள்
    X

    மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள ரேசன் கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை கலெக்டர் அனிஷ்சேகர், மேயர் இந்திராணி ஆகியோர் இன்று வழங்கி தொடங்கி வைத்தனர்.

    ரூ.9.30 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள்

    • ரூ.9.30 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்குபொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படும் என கலெக்டர் அனிஷ்சேகர் தெரிவித்தார்.
    • அரிசி அட்டைதாரர்கள் 1,263 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டன.

    மதுரை

    பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் கொண்டாடும் வகையில் அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை, முழு நீள கரும்பு ஆகிய பொங்கல் பரிசு தொகுப்புகள் இன்று முதல் வழங்கப்படுகின்றன.

    மதுரை மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சியை கலெக்டர் அனிஷ் சேகர், மேயர் இந்திராணி ஆகியோர் ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள பாண்டியன் சூப்பர் மார்க்கெட் ரேஷன் கடையில் தொடங்கி வைத்தனர்.

    அப்போது அந்த ரேசன் கடையில் உள்ள அரிசி அட்டைதாரர்கள் 1,263 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டன. பின்னர் கலெக்டர் அனிஷ்சேகர் கூறியதாவது:-

    மதுரை மாவட்டத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புகள் இன்று முதல் 4 நாட்களுக்கு வழங்கப்படும். மதுரை மாவட்டத்தில் 9 லட்சத்து 30 ஆயிரத்து 339 அரிசி அட்டைதாரர்களுக்கும், இலங்கை மறுவாழ்வு முகாமில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.

    இந்த பரிசு தொகுப்பில் உள்ள அனைத்து பொருட்களும் தரமான பொருட்களாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு கடைகளிலும் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தரமான பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×