என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  13 மையங்களில் 8,833 பேர் நீட் தேர்வு எழுதினர்
  X

  நீட் தேர்வு எழுதும் முன்பு மாணவிகளின் ஹால் டிக்கெட் சரி பார்க்கப்பட்டது.

  13 மையங்களில் 8,833 பேர் நீட் தேர்வு எழுதினர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரையில் இன்று 13 மையங்களில் 8,833 பேர் நீட் தேர்வு எழுதினார்கள்.
  • மதியம் 1.30 மணிக்கு மேல் வந்தவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

  மதுரை

  மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடந்தது. தமிழகத்தில் 18 நகரங்களில் இன்று தேர்வு நடத்தப்பட்டது. இதில் ஒரு லட்சத்து 42 ஆயிரம் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். இதற்காக தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் கேள்வித்தாள்கள் தயாரிக்கப்பட்டு இருந்தன.

  மதுரை மாவட்டத்தில் நீட் தேர்வுக்காக 13 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு 8833 மாணவ- மாணவியர் கலந்து கொண்டு நீட் தேர்வு எழுதினார்கள். மதியம் 2 மணி அளவில் தேர்வு தொடங்கி, மாலை 5.20 மணி வரை நடக்கிறது. முன்னதாக மதியம் 1:30 மணிக்குள் மாணவ மாணவிகள் தேர்வு மையத்துக்கு வந்தனர். அப்போது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மதியம் 1.30 மணிக்கு மேல் வந்தவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

  நீட் தேர்வுக்காக வந்திருந்த மாணவ-மாணவிகள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அரசு புகைப்பட அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் இன்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி மாணவர்களின் ஆவணங்கள் பரிசோதிக்கப் பட்டன.

  அடுத்தபடியாக ஆடை கட்டுப்பாடு உட்பட இதர வழிகாட்டு நெறிமுறைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதன் பிறகு மாணவ மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அனைத்து தேர்வு அறையிலும் சிசிடிவி கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

  மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டு 1500 மாண வர்கள் குறைவாக தேர்வு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×