search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை குடிநீர் திட்டம்: முல்லைப்பெரியாற்றில் 2ம் கட்ட தூண்கள் அமைக்கும் பணி தொடக்கம்
    X

    முல்லைபெரியாறு அணை

    மதுரை குடிநீர் திட்டம்: முல்லைப்பெரியாற்றில் 2ம் கட்ட தூண்கள் அமைக்கும் பணி தொடக்கம்

    • மதுரை குடிநீர் திட்டக்கு ழாய் அமைக்கும் பணிகள் உத்தமபாளையம் முல்லை ப்பெரியாற்றில் மேல் பகுதியில் முதற்கட்ட பணிகள் முடிவடைந்து ள்ளது.
    • தற்போது 2ம் கட்ட மாக ஆற்றின் மறு பகுதியில் தூண்கள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

    உத்தமபாளையம்:

    மதுரை குடிநீர் திட்டக்கு ழாய் அமைக்கும் பணிகள் உத்தமபாளையம் முல்லை ப்பெரியாற்றில் மேல் பகுதியில் முதற்கட்ட பணிகள் முடிவடைந்து ள்ளது.

    இந்த நிலையில் ஆற்றின் அடுத்த பகுதியில் தூண்கள் அமைப்பதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணிகள் தொடங்கி உள்ளது. மதுரை மாநகராட்சிக்கு தினசரி 125 மில்லியன் கன அடி நீர் தண்ணீர் பெறும் வகையில் தேனி மாவட்டம் ேலாயர் கேம்பில் புதிய குடிநீர் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அம்ரூத்-3 என்னும் திட்டத்தில் ரூ.1295.76 கோடி மதிப்பில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    லோயர்கேம்ப், வண்ணா ந்துரை பகுதியில் தலைமை நீரேற்றும் நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய் மூலம் திண்டுக்கல் மாவட்டம் பண்ணப்பட்டி க்கு கொண்டு செல்லப்படு கிறது. அங்கு நீர் சுத்திகரிக்க ப்பட்டு மதுரைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்ப ட்டுள்ளது.

    தற்போது லோயர்கே ம்ப்பில் இருந்து தப்புக்குண்டு விலக்கு வரை குழாய் பதிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.

    இந்த வழித்தடத்தில் உத்தமபாளையம் பைபாஸ், கண்டமனூர் அருகே அடைக்கம்பட்டி ஆகிய இடங்களில் முல்லைப்பெரி யாற்றின் குறுக்கே தூண்கள் அமைத்து குழாயை அதன் மேல் பதிக்க திட்டமிடப்பட்டு ள்ளது. உத்தமபாளையத்தில் இதற்கான பணிகள் நடை பெற்று வருகிறது. ஆற்றில் நீரோட்டம் ெதாடர்வதால் ஒரே நேரத்தில் பணிகள் மேற்கொள்ள முடியாது.

    எனவே முதல் கட்டமாக நீரோட்டம் மாற்றப்பட்டு அப்பகுதியில் தூண்கள் கட்டப்பட்டன. அங்கு 3 தூண்கள் அமைக்கப்பட்டு அதன்மேல் குழாய்களை பதித்து அளவீடு செய்யப்ப ட்டது. தற்போது 2ம் கட்ட மாக ஆற்றின் மறு பகுதியில் தூண்கள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. தூண்கள் அமைப்பதற்காக மண் அள்ளும் எந்திரம் மூலம் அஸ்திவாரம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    வெள்ளம் வந்தாலும் குழாய்க்கு பாதிப்பு ஏற்ப டாத வகையில் உயரமாக கட்டப்பட்டு வருகிறது. 5 தூண்களில் 3 தூண்களு க்கான பணிகள் முடிவடை ந்துள்ளது. மீதம் உள்ள 2 தூண்கள் 3 மாதத்தில் கட்டப்பட்டு குழாய் பதிக்கும் பணி தேனி மாவட்டத்தில் விரைவில் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்த னர்.

    Next Story
    ×