search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பென்னாகரத்தில்  ரூ.20.55 லட்சம் மதிப்பிலான கடன் உதவி
    X

    பயனாளிகளுக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழஙகப்பட்டது.

    பென்னாகரத்தில் ரூ.20.55 லட்சம் மதிப்பிலான கடன் உதவி

    • தொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்கும் நிகழ்வு பென்னாகரம் அருகே பருவதன அள்ளி வட்டார நல அலுவலகத்தில் நடைபெற்றது.
    • 6 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடனுதவி என 34 பயனாளிகளுக்கு தலா 50,000 விதம் ரூ.20.55 லட்சம் மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்கும் நிகழ்வு பென்னாகரம் அருகே பருவதன அள்ளி வட்டார நல அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதனையடுத்து 28 பயனாளிகளுக்கு தொழில் முனைவோர் கடன் 6 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடனுதவி என 34 பயனாளிகளுக்கு தலா 50,000 விதம் ரூ.20.55 லட்சம் மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.

    இந்த விழாவில் விழாவிற்கு மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் பத்ஹூ முகம்மது நசீர் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். மேலும் உதவி திட்ட அலுவலர்கள் கார்த்திகேயன், பெரியநாயகம், வெற்றிசெல்வன்,ராஜேஷ் மாவட்ட வழ பயிற்றுநர்கள் தென்னரசு, வட்டார மேலாளர் என் பிரதீப், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் வெற்றிவேல்,லலிதா, ஜான்சி ராணி, தமிழ்ச்செல்வி, கண்ணகி சமுதாய வலப் பயிற்றுநர்கள் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

    Next Story
    ×