search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்மை நோயால் கால்நடைகள் பாதிப்பு - விவசாயிகள் கவலை
    X

    அம்மை நோயால் கால்நடைகள் பாதிப்பு - விவசாயிகள் கவலை

    • பலர் பசுமாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
    • மாவட்டம் முழுவதும் கிராமம் கிராமமாக அனைத்துகால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியத்தில் 31 ஊராட்சி பகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆடு,மாடு, எருமை போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இதில் பலர் பசுமாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அவினாசி ஒன்றியத்தில் தெக்கலூர், புதுப்பாளையம், நல்லூர், கருவலூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக நூற்றுகணக்கான மாடுகளுக்கு மர்ம நோய் தாக்கியுள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், விவசாய தொழிலுடன் சேர்த்து கால்நடைகளை வளர்த்து வருகிறோம். இந்தநிலையில் மாடுகளுக்கு கோமாரி நோய் போல மர்ம நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

    கால்நடைகள் தீவனம் எடுத்து கொள்வதில்லை. தண்ணீரும் குடிப்பதில்லை. நோய் தாக்குதலடைந்த கால்நடைகள் சோர்ந்துபோய் படுத்துகிடக்கிறது. மாடுகளுக்கு சிகிச்சை அளித்தும் எந்த பலனும் இல்லை.

    செங்காளிபாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது சினை மாடு நோய் தாக்குதலால் செத்தது. இவர் பசுமாடு வளர்த்து பால் வியாபாரம் செய்து குடும்பம் நடத்திவந்த நிலையில் பசுமாடு பலியானது.

    இது போன்று இன்னும் பல மாடுகள் மிகவும் சோர்வடைந்த நிலையில் உள்ளது. எனவே கால்நடை மருத்துவத்துறையினர் உடனடியாக கால்நடைகளை பரிசோதித்து அவைகளுக்கு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இது குறித்து கால்நடைத்துறை மருத்துவரிடம் கேட்ட போது, கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முனபு இதுபோல் கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்கம் ஏற்பட்டு அவைகளுக்கு தடுப்பூசி செலுத்தி குணமடைந்துள்ளது.

    தற்போது மாவட்டம் முழுவதும் கிராமம் கிராமமாக அனைத்துகால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.அச்சப்பட தேவையில்லை என்றனர்.

    Next Story
    ×