என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லிகாய் சங்க விளக்க கூட்டம்
    X

    லிகாய் சங்க விளக்க கூட்டம்

    • புதுக்கோட்டை கிளை யில் எல்.ஐ.சி. அலுவலகத்திற்கு முன்பாக விளக்கக் கூட்டம் நடை பெற்றது.
    • தமிழ் மாநில செயல் தலைவர் அன்பு நடராஜன் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான விளக்க உரை ஆற்றினார்

    புதுக்கோட்டை

    அகில இந்திய எல்.ஐ.சி.முகவர்கள் சங்கம் புதுக்கோட்டை கிளை சார்பில் அடுத்த மாதம் 13-ந் தேதி சென்னை தென்மண்டல அலுவலகம் முன்பாக தமிழ்நாடு,கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்ட லிகாய் சங்கம் சார்பில் சென்னையில் 7 அம்ச கோரிக்கைகள் தொட ர்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இதுதொடர்பாக வலி யுறுத்தி புதுக்கோட்டை கிளை யில் எல்.ஐ.சி. அலுவலகத்திற்கு முன்பாக விளக்கக் கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்திற்கு கிளையின் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.செயலாளர், மதியழகன் வரவேற்றார் , பொருளாளர் பானுமதி, கௌரவ தலைவர் தங்கவேல் ஆகி யோர் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினர்.

    தமிழ் மாநில செயல் தலைவர் அன்பு நடராஜன் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான விளக்க உரை ஆற்றினார். நிறைவாக செயற்குழு உறுப்பினர் தெய்வா நன்றி கூறினார். கூட்டத்திற்கு செயற்குழு மற்றும் பொது உறுப்பி னர்கள் என சுமார் 47 முகவ ர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×