search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பகோணத்தில் சட்ட கல்வி அறிவு விழிப்புணர்வு முகாம்
    X

    மாணவர்களுக்கான சட்டக் கல்வி அறிவு விழிப்புணர்வு முகாம்.

    கும்பகோணத்தில் சட்ட கல்வி அறிவு விழிப்புணர்வு முகாம்

    • சட்டங்கள் மனிதர்களை நல்வழிப்படுத்த ஏற்படுத்த ப்பட்டுள்ளதன் அவசியம் குறித்து பேசினார்.
    • கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ரஞ்சிதா சட்டம் பற்றி மாணவர்களிடையே கலந்துரையாடினார்.

    கும்பகோணம் :

    கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும் தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவருமான சண்முக ப்பிரியா அறிவுரையின்படி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான சட்டக் கல்வி அறிவு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    பள்ளியின் துணை முதல்வர் தனலட்சுமி வரவேற்புரை நிகழ்த்தினார். கும்பகோணம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றின் நீதிபதி பாரதிதாசன் சட்டங்கள் மனிதர்களை நல்வழிப்படுத்த ஏற்படுத்த ப்பட்டுள்ளதன் அவசியம் குறித்து பேசினார். கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ரஞ்சிதா சட்டம் பற்றி மாணவர்களிடையே கலந்துரையாடினார்.

    நிகழ்ச்சியில் கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் வழக்கறிஞர்கள் மோகன்ராஜ், சிவகுமார், சசிகலா மற்றும் கும்பகோணம் வழக்கறிஞர் சங்க உறுப்பினர் விஷ்ணு பிரியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தன்னார்வ சட்டப் பணியாளர்கள் ராஜேந்திரன், குணசீலன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×