என் மலர்
உள்ளூர் செய்திகள்

அக்சீலியம் கல்லூரிக்கு ரூ.5.31 லட்சத்தில் எல்.இ.டி. திரை
- நிர்வாகத் துறையின் வெள்ளி விழாவை முன்னிட்டு, ரூ.6.51 லட்சம் மதிப்பிலான வெளிப்புற எல்.இ.டி. திரை வழங்கப்பட்டது.
- ரூ.1.72 லட்சம் மதிப்பில் உணவு மற்றும் கேக்குகளை ஐ.வி.டி.பி. நிறுவனரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை தலைமையிடமாக கொண்டு ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்து செயல்பட்டு வருவதுடன், கல்வி பணியிலும் சேவையாற்றி வருகிறது.
மேலும் பள்ளி, கல்லூரி களுக்கு தேவையான உதவி தொகைகள், ஊக்கத் தொகைகளை வழங்கி பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வேலூரில் உள்ள அக்சீலியம் கல்லூரி மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்கும் ஐ.வி.டி.பி. உதவி வருகிறது.
இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் நலனைக் கருத்தில் கொண்டு கல்லூரி நிர்வாகம் கேட்டுக்கொண்டதின் பேரில் அக்கல்லூரியில் வணிக நிர்வாகத் துறையின் வெள்ளி விழாவை முன்னிட்டு, ரூ.6.51 லட்சம் மதிப்பிலான வெளிப்புற எல்.இ.டி. திரை வழங்கப்பட்டது.
இதில் ஐ.வி.டி.பி.யின் பங்களிப்பாக வெளிப்புற எல்.இ.டி. திரைக்கு ரூ.3.59 லட்சமும், வணிக நிர்வாகத் துறை சார்ந்த 700 மாணவிகள் மற்றும் அனைத்து பேராசிரியர்களுக்கும் ரூ.1.72 லட்சம் மதிப்பில் உணவு மற்றும் கேக்குகளை ஐ.வி.டி.பி. நிறுவனரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், கல்லூரியில் படிக்கும் மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு எல்.இ.டி. திரை வழங்கப்பட்டுள்ளது.
மாணவிகள் தங்கள் வாழ்க்கையில் தங்களுக்கான வாய்ப்புகளைத் தேடி கண்டுபிடித்தால் தான் வாழ்க்கையில் வெற்றி அடைய முடியும். இக்கல்லூரியின் கல்வி வளர்ச்சிக்காக இதுவரை ரூ.1.24 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றார்.






