search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானல் சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
    X

    கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள்.

    கொடைக்கானல் சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

    • இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக வக்கீல் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் காமராஜர் சாலை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக வக்கீல் திருமுருகன் என்பவர் மீதும் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

    கொடைக்கானலில் நேற்று வழக்கறிஞர் சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சங்கத்தை சார்ந்த வக்கீல் திருமுருகன் மீது சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் பொய்யான முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்து ஒரு சார் ஆதரவு நிலைப்பாட்டினை எடுத்துள்ளார்.

    இதனை கண்டித்தும் வழக்கிற்கு சம்பந்தமே இல்லாத வக்கீல் திருமுருகனின் மீது புனையப்பட்ட பொய்யான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரியும், சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கொடைக்கானல் வக்கீல் சங்கத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை கோர்ட்டு பணிகளில் இருந்து தொடர்ச்சியாக விலகி இருப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×