என் மலர்
உள்ளூர் செய்திகள்

அடிப்படை வசதி இன்றி அவதிப்படும் ஜீவாநகர் பகுதியை படத்தில் காணலாம்.
அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் பெரியதள்ளப்பாடி ஜீவாநகர் மக்கள்
- பழுதான மின்கம்பம் ஒன்று மிகவும் மோசமான நிலையிலும் உடைந்து விடும் அபாய நிலையில் உள்ளது.
- அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த பெரிய தள்ளப்பாடி பஞ்சாயத்து ஜீவா நகர் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த பகுதியில் குடியிருக்கும் வீட்டின் அருகாமையிலே பழுதான மின்கம்பம் ஒன்று மிகவும் மோசமான நிலையிலும் உடைந்து விடும் அபாய நிலையில் உள்ளது.
அவற்றை உடனடியாக மாற்றி அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இப்பகுதியில் போதுமான சாலை வசதி மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் மின்விளக்கு எரிவதில்லை எனவும், இதனால் விஷ ஜந்துக்களின் தொல்லை அதிகமாக இருப்பதாகவும் உடனடியாக இந்த அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மழைக்காலங்களில் இப்பகுதிகளில் இருந்து வெளியே செல்வது மிகவும் சவாலான நிலையில் காணப்படுகிறது. அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த அடிப்படை வசதி தொடர்பாக ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் தொடர்பு கொண்டு கேட்டபோது நேரில் ஆய்வுகள் மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார்.
மேலும் பழுதான மின்கம்பத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக சிங்காரப்பேட்டை உதவி செயற்பொறியாளர் தொடர்பு கொண்ட போது உடனடியாக மின்கம்பத்தை மாற்றி அமைப்பதாக கூறினார்.






