என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குட்டூர் அரசு பள்ளிக்கு   ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மேஜை,நாற்காலி   -மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வழங்கினார்
    X

    குட்டூர் அரசு பள்ளிக்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மேஜை,நாற்காலி -மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வழங்கினார்

    • பென்ச், டெஸ்க் மற்றும் உபகரணங்களை ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் வழங்கினார்.
    • ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    பர்கூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் குட்டூர் ஊராட்சி ஆரம்ப பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளியில் 15 -வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வள்ளி பெருமாள் அவருடைய வார்டு மேம்பாட்டு நிதி மூலம் பள்ளிக்கு தேவையான பென்ச், டெஸ்க் மற்றும் உபகரணங்களை ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் வழங்கினார்.முன்னாள் எம்.பி.யும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க அவைத் தலைவர் பெருமாள், தலைமை ஆசிரியை தமிழரசி மற்றும் ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×