search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரக்கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் மும்முரம்- தருமபுர ஆதீனம் ஆய்வு
    X

    கும்பாபிஷேக திருப்பணிகளை தருமபுர ஆதீனம் பார்வையிட்டார்.

    குமரக்கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் மும்முரம்- தருமபுர ஆதீனம் ஆய்வு

    • திருப்பணிகள் நிறைவடைந்து அடுத்த மாதம் 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
    • கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை அமையவுள்ள இடைத்தை பார்வையிட்டார்.

    சீர்காழி:

    சீர்காழியில் தருமபுர ஆதினத்திற்கு உட்பட்ட சட்டைநாத சுவாமி தேவதானத்தை சேர்ந்த குமரக்கோவில் பிடாரிவடக்கு வீதியில் அமைந்துள்ளது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 1986ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகாசந்நிதானம் முன்னிலையில் நடைபெ ற்றது.

    அதன்பிறகு இக்கோ யிலுக்கு கும்பாபிஷேகம் செய்திட தருமபுரம் ஆதினம் 27-வது குருமகாசந்நிதானம் ஏற்பாட்டின்படி 36 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்திட திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருப்பணிகள் நிறைவடைந்து அடுத்த மாதம் 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

    இதனிடையே திருப்ப ணிகளை தருமபுர ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கோயில் விமானகலச பணிகள், மூலவர் சந்நிதி பணிகள், வெளிமண்டபம் பணிகள், கருங்கற்கள் பிரகார பதிப்பு பணிகள், முகபு மண்டபம் திருப்பணிகள் ஆகியவற்றையும், வர்ணபூச்சு பணிகளையும் தருமபுரம் ஆதீனம் பார்வையிட்டார்.

    கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை அமையவுள்ள இடைத்தையும் பார்வை யிட்டார்.

    அப்போது சட்டைநாதர் கோயில் கணக்கர் செந்தில், தமிழக கோயில் சொத்து பாதுகாப்பு மீட்புக் குழு அமைப்பு நிர்வாகி பாலசுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர் பந்தல்.முத்து, தி.மு.க. நிர்வாகி பாபு, ரோட்டரி சங்க முன்னாள் செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×