என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழாவில் திரளான பக்தர்கள் மாவிளக்கு எடுத்து கொண்டு கோவிலுக்கு ஊர்வலமாக சென்ற காட்சி.
கிட்டம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
- கிட்டம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
- கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டி கிராமத்தில் உள்ள மகாசக்தி மாரியம்மன் மற்றும் குண்டி மாரியம்மன் கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 8-ந் தேதி காலை மகா கணபதி ஹோமம், கோ பூஜை, மகா கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம், கங்க பூஜை, முதல்கால யாக பூஜை ஆகியவை நடந்தன.
நேற்று முன்தினம் 2-ம் கால யாக பூஜை, சுவாமி சிலைகள் நகர்வலம், மூன்றாம் கால யாக பூஜை, விமான கோபுரத்திற்கு கலசம் வைத்தல், தானியங்கள் நிரப்புதல் ஆகியவை நடந்தன.
நேற்று காலை, நான்காம் கால யாக பூஜை, மஹா பூர்ணாஹூதி, கடம்பு றப்பாடு, கலசம் கோவிலுக்கு வருதல் மற்றும் காலை 9.30 மணிக்கு மஹா சக்தி மாரியம்மன் மற்றும் குண்டி மாரியம்மன் கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தன.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தன.
இதில் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவ ருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது.






