search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    26 ஆண்டுகளுக்கு பிறகு பழனி இடும்பன் கோவிலில் கும்பாபிஷேகம்
    X

    கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றுவதையும், கலந்து கொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்.

    26 ஆண்டுகளுக்கு பிறகு பழனி இடும்பன் கோவிலில் கும்பாபிஷேகம்

    • பழனி இடும்பன் கோவிலில் 26 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பழனி:

    பழனி சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலை பகுதியில் இடும்பன் கோவில் அமை ந்துள்ளது. அறநிலை யத்துறைக்கு உட்பட்ட இக்கோவிலில் இடும்பன், கடம்பன், முருகப்பெரு மானுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. பழனிக்கு வரும் பக்தர்கள் இடும்பன்குளத்தில் புனிதநீராடிவிட்டு இடும்பனை தரிசிப்பது வழக்கம். பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் 26 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. எனவே பழனி இடும்பன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை முடிவு செய்தது.

    முதற்கட்டமாக கோவி லில் சிதிலம் அடைந்த கட்டிடம், கோபுரம் ஆகியவை சீரமைக்கப்பட்டு, வர்ணம் பூசும் பணி நடை பெற்றது. திருப்பணிகள் அனைத்தும் ஏறக்குறைய முடிவடைந்ததை அடுத்து கோவில் வெளிப்பகுதியில் கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை அமைக்க ப்பட்டது. முதல் நாள் காலை 8.15 மணிக்கு மங்கல இசையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கியது. திருவிளக்கு ஏற்றுதல், விநாயகர் பூஜை, தீபாராதனை, திருமுறை விண்ணப்பம் ஆகிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு விநாயகர் பூஜை, கும்பத்தில் சக்தி எழ செய்தல், முதற்கால யாகம் நடைபெற்றது. யாக முடிவில் தீபாராதனை ஆகிய நிகழ்ச்சி நடை பெற்றது. பின்னர் இரவு 9 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளின் விமான கலசங்கள் பொருத்தப்பட்டது. நேற்று காலை 7 மணிக்கு மங்கல இசை, 7.15 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 9 மணிக்கு மருந்து சாத்துதல், 9.30 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகம், தீபாராதனை, திருவடி விண்ணப்பம் ஆகிய நிகழ்ச்சி நடந்தது.

    இன்று மங்கல இசை, திருப்பள்ளி எழுச்சியுடன் 4-ம் கால யாகம் தொடங்கியது. பின் யாகம் நிறைவு பெற்று, திருமுறை விண்ணப்பம், திருவடி விண்ணப்பம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 7.45 மணிக்கு யாகசாலையில் இருந்து திருக்குடங்கள் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. பின் அவை கோவில் விமானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்க ப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடு களை கோவில் நிர்வா கத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×