search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவதானப்பட்டியில் மீனாட்சி சமேத சிவபெருமான் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டதையும், கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியையும் படத்தில் காணலாம்.

    தேவதானப்பட்டியில் மீனாட்சி சமேத சிவபெருமான் கோவில் கும்பாபிஷேகம்

    • தீர்த்த குடங்கள் தேவதானப்பட்டி சிவபெருமான் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
    • கோவில் பிரகாரத்தில் வலம் வந்து அனைத்து மூலஸ்தான மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் 300 ஆண்டுகள் பழமையான மீனாட்சியம்மன் சமேத சிவபெருமான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் தொடங்கியது. நேற்று கோவிலில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டு மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் அங்கிருந்து தீர்த்த குடங்கள் தேவதானப்பட்டி சிவபெருமான் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    முன்னதாக யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு கும்பாபிஷேக விழா தொடங்கிய நிலையில் நேற்று 5-ம் கால பூஜை நடைபெற்றது. காலை 10.10 மணிக்கு திருக்கயிலாய வாத்தியங்களுடன் தீர்த்தக்குடங்கள் புறப்பாடாகி கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோவில் பிரகாரத்தில் வலம் வந்து அனைத்து மூலஸ்தான மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மகாதீபாராதனை காட்டப்பட்டது. திருவிழாவை காண பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். அவர்களுக்கு போலீசார் தலைமையில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு மீனாட்சியம்மன், சிவபெருமான் உருவ படம் பொறித்த தங்கமுலாம் பூசப்பட்ட நாணயங்களும் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை சின்னஞ்செட்டியார் வம்சாவழிகள் மற்றும் 24 மனை தெலுங்குசெட்டியார்கள், தவளையர் கோத்திரத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×