search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அந்தணப்பேட்டை, காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    அந்தணப்பேட்டை, காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்

    • கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
    • வண்ண மலர்களால் சிவன்- அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் அந்தணப்பேட்டை ஊராட்சி கருவேலி பகுதியில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த விசாலாட்சி அம்பிகை சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இவ் கோவிலில் மகா கும்பாபிஷேகம் 120 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது.

    கடந்த 22 ஆம் கணபதி ஹோமத்துடன் தொடங்கிய யாகசாலை நான்கு காலங்கள் நடைபெற்றது நான்காம் கால யாகசாலை பூஜைக்கு நேற்று காலை கோவிலில் நான்கு பிரகாரங்கள் வழியாக மல்லாரி இசை முழங்க புனித கடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிவன், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், உள்ளிட்ட கோபுர கலசங்களுக்குபுனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடை பெற்றது.

    அதனைத் தொடர்ந்து சிவன் மற்றும் அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில்சூரியனார் கோயில் ஆதீனம் தவத்திரு சிவக்கர தேசிக சுவாமிகள்அறநிலை துறை உதவி ஆணையர் இராணிமற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு சிவவாத்தியங்கள் இசைக்கப்பட்டன.

    Next Story
    ×